2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - விருச்சிகம்

2024-ம் ஆண்டு குரு பெயர்ச்சி ராசி பலன்கள் - விருச்சிகம்

வலிமையான செயல்களை திறமையுடன் செய்யும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
எதிர் வரும் 01-05-2024 முதல் இதுவரை ஆறாமிடத்திலிருந்த குரு பகவான் இனி களத்திரஸ்தானத்தில் அமர்வதால், சிறப்பான நல்ல பலன்களையும், ஏற்கனவே இருக்கும் அர்த்தாஷ்டம சனியால் வரும் துன்பமும் நீங்க பெறுவீர்கள்.
 
குருவின் பார்வை.. உங்களின் ராசியிலும், மூன்றாமிடமான முயற்சிஸ்தானத்திலும், லாப ஸ்தானத்திலும் படுவதால்.. இந்த ஓராண்டு காலத்திற்கு சிறப்பான நற்பலன்களை பெறுவீர்கள். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்படும் உங்களின் திறன் மேலும் பலப்படும். பத்தாம் பார்வையாக சனி உங்களின் ராசியை பார்ப்பதால் வரும் கெடு பலன்கள்.. குரு பார்வையால் குறையும். உடல்நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். 
 
சாதுர்யமாக பேசி சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். புனிதமான உங்களின் முயற்சிகள் அத்தனையும் எதிர்பார்த்தத்தை விட நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவு நீங்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எதிர்காலத்தை கணித்து நீங்கள் செயல்படும் காரியம் அதற்கான செயல்களின் ஆதிக்கம் செலுத்தும் துணிச்சல் உண்டாகும். 
 
அரசியலிலும் உங்களுக்கு புதிய செல்வாக்கும், எதிர்பார்த்த நன்மையும் உண்டாகும். கலைதுறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும். சீக்கிரம் சிலருக்கு திருமண வாய்ப்பு அமையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இழந்த சொத்துகள், இழந்த பணம் கிடைக்க.. உங்களின் முயற்சிகளின் மூலம் நன்மை உண்டாகும். உங்களின் லாபஸ்தானத்தை குரு பார்ப்பதால், தொழிலில் முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் உண்டாகும்.
 
பணியில் இருப்பவருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல பலன் கிடைக்கும். கணவன்- மனைவி உறவுகளில் இருநது வந்த பிரிவினை, கருத்து வேறுபாடுகள் நீங்கி, நன்மை உண்டாகும். பிரிந்த உறவுகள் மீண்டும் வந்து சேருவார்கள். புத்திரரால் வந்த பல கஷ்டங்கள் நீங்கும். கடன் தொல்லைகளிலிருந்தும் விடுபடுவீர்கள்.
 
பரிகாரம்:
 
வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபமேற்றி, மஞ்சள் நிற பூ சாற்றி, சந்தனம் வாங்கி கொடுத்து வேண்டிக் கொள்ள, சகல காரியத்திலும் நன்மையும், அனுகூலமும் உண்டாகும்.